மேட்டுப்பாளையத்தில் போலீசார் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.!!மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து வீட்டின் மீது விழுந்ததில் 17 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை, வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கு பதிவு உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே உடல் வாங்கப்படும் என போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த சுவரை அப்புறப்படுத்தப் பல முறை கூறியும் அதனை அலட்சியப்படுத்தி விபத்தை ஏற்படுத்தி 17 உயிரை காவு வாங்கிய வீட்டின் உரிமையாளரை உடனடியாக கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கூறி போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

 306 total views