முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் இலவச உணவின்றி நோயளிகள் தவிப்பு

முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் இலவச உணவின்றி நோயளிகள் தவிப்பு

May 15, 2017 0 By BAHRULLA SHA

முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் ஏழை உள்நோயாளிகளுக்கு தமிழக அரசின் சார்பாக தினமும் மூன்று வேலை உணவுகள் வழங்கப்படும். இத்திட்டத்தினை வசதியில்லாத ஏழை நோயாளிகளுக்காகவே தமிழக அரசு கொண்டு வந்தது. ஆனால் கடந்த 15 நாட்களாகவே இத்திட்டம் செயல்படாமல் நோயாளிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். 40க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில்,உணவு வசதி இல்லாததால் தற்போது உள்நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. வயதானோர், ஆதரவற்ற முதியோர் சுடு தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். மக்களின் சேவை புறக்கணிக்கப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர். சமயல்காரர் ஓய்வு பெற்ற நிலையில் மருத்துவ அதிகாரிகள் புதிய சமையல்காரர் நியமிக்கப்படாமல் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தவே இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும், நோயாளிகளுக்கு உணவு வசதிகள் கிடைக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க சில சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

719 total views, 2 views today