மின் கசிவால் புரோட்ட கடை தீ பிடித்து பொருட்கள் சேதம்

செங்கோட்டை  மின் கசிவு காரணமாக புரோட்ட கடை தீ பிடித்து எரிந்தது.

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகிலுள்ள பகுதியில் பஷீர் அகமது என்பவருக்கு சொந்தமான செயல்பட்டு வருகிறது. திங்கள் கிழமை  நள்ளிரவில் கடையை அடைத்துவிட்டு உரிமையாளர் மற்றும் பணியாளர் கள் வீட்டுக்கு சென்று விட்டனர்.  இந்நிலையில்  கடையில்   தீடீர் என  தீ பிடித்து வேகமாக பரவி கொழுந்து விட்டு எரிந்து உள்ளது.

இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வீரர்கள் விரைந்து வந்து மின் சாரத்தை துண்டித்து சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். தீ விபத்தில்  கடை முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.

மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து நடந்து இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. செங்கோட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

483 total views, 3 views today

Leave a Reply

Registration

Forgotten Password?

Close