கோவை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ளாட்சித் துறை

அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் கொரொனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களிடம் பேசுகையில்,

கோவையில் கொரொனா தொற்று வேகம் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றது..

கோவையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்த மருத்துவமுறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

கோவையில் இதுவரை 80623 பேருக்கு பரிசோதனை செய்ததில் 1591 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

தினந்தோறும் தனிமைபடுத்தப்பட்டவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர்.

கோவை மாவட்டத்திற்குள் வாகனங்கள் மூலம் அனுமதி இன்றி நுழைவதை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

கோவை மாநகராட்சியில் கழிவுகளை அகற்ற ரோபோடிக் 2.0 என்ற இயந்திரம் இன்று கோவை மாநகராட்சியில் வழங்கப்பட்டுள்ளது.

இது பயன்பாட்டிற்கு வரும் போது மனித கழிவுகளை மனிதர் அகற்றும் சூழல் இல்லாத நிலை ஏற்படும்.

தமிழகத்தில் உள்ள 34 நகரங்களுக்கும் கழிவுகளை அகற்ற ரோபோடிக் 2.0 இயந்திரம் வழங்கப்பட இருக்கின்றது.

கோவையில் நோய் தொற்று அதிகமாக வர துவங்கி இருக்கின்றது.

இரு சக்கர வாகனங்கள் அனுமதி இன்றி வருபவர்களால் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது

வெளியூரில் இருந்து யாராவது அனுமதி இன்றி வந்திருப்பது தெரியவந்தால் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்

தொற்று ஏற்பட்டவர்களை அன்பாக பாதுகாத்தாலே நோய் குணமாகிவிடும்

மாஸ்க் போடாதவர்களிடம் பேசாதீர்கள். அவர்களிடம் இருந்து விலகி இருங்கள்

மாநகராட்சியின் ஒரு சில கட்டுப்பாட்டு பகுதிகளில் தொடர்ந்து தொற்று
வந்து கொண்டு இருக்கின்றது.

டெஸ்ட் முடிவுகள் தாமதம் ஏற்பட கூடாது என்பது குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

முழு ஊரடங்கிற்கு இப்போது தேவையில்லை

தேவைப்பட்டால் மருத்துவதுறை ஆய்வு செய்து தெரிவிப்பார்கள்

முழு ஊரடங்கு கொண்டு வந்தால் தொழிலாளர்கள் பாதிப்பார்கள்

அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் முழு ஊரடங்கு தேவைப்படாது என்றார்.

 22 total views,  2 views today