மாற்றுத்திறனாளிகளுக்கான ரயில் பெட்டியில் சட்டவிரோதமாக பயணம் செய்தவர்களுக்கு அபராதம்

மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக ரயில் பெட்டியில் பயணம் செய்த வழக்கமான பயணிகளுக்கு தலா ரூபாய் 500 அபராதம் விதிக்கப்பட்டது.

ஒவ்வொரு ரயிலிலும் மாற்றுத் திறனாளிகள் சிரமம் இன்றி பயணிக்க அவர்களுக்கு ஏற்ற வகையில் பிரத்யேக பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த பெட்டிகளில் மாற்றுத்திறனாளிகள் மட்டுமே பயணிக்க வேண்டும். இந்த நிலையில் உலக மாற்றுத்திறனாளிகள் நாளை முன்னிட்டு சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் இருந்து புறப்பட்ட ரயில்களில் அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, மாற்றுத் திறனாளிகள் ரயில் பெட்டியில் பயணம் செய்த வழக்கமான பயணிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு தலா 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதுவரை சுமார் 100 பேரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டதாக ரயில்வே பாதுகாகாப்பு படையினர் கூறியுள்ளனர்.

 577 total views,  2 views today