மாற்றுத்திறனாளிகளுக்கான தமிழக கிரிக்கெட் அணி அறிவிப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கான தமிழக கிரிக்கெட் அணி அறிவிப்பு

தமிழக அளவிலான அனைத்து மாவட்டத்திலிருந்தும் மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணி தேர்வு மதுரை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றது. அக்டோபர் மாதம் மும்பையில் நடக்க இருக்கும் தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிக்கான மாநில அளவிலான அணி தேர்வு மதுரையில் நடைபெற்றது. இதில் இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரரும் தமிழக அணி தலைவருமான சிவகுமார் மற்றும் தமிழக மாற்றுதிறனாளி அணி மேலாளர் ஹரி ஆகியோரின் தலைமையில் நடத்தப்பட்டது. அணி தேர்விற்க்கு அனைத்து மாவட்டத்திலும் இருந்து நாற்பதுக்கும் மேற்பட்ட மாற்றுதிறனாளி வீரர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் செயல்திறமைகளின் அடிப்படையில் 25 பேர் கொண்ட இரு குழுவாக பிரிக்ப்பட்டனர். அந்த 25 வீரர்கள் மட்டும் சென்னையில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் கலந்து கொண்டனர். சென்னையில் IDUS என்டர்பிரைசஸ் நிறுவனரும் தமிழக கிரிக்கெட் போட்டிகளின் நடுவருமான முருகானந்தம் அவர்களின் சொந்த செலவில் பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்றது. அதில் வீரர்களுக்கு தேவையான யுக்திகளும் கற்று கொடுக்கப்பட்டன. பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி 15 மாற்றுத்திறனாளி வீரர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் மட்டுமே மும்பையில் நடக்கவிருக்கும் தேசிய கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பார்கள் என தமிழக மாற்றுத்திறனாளி அணி தலைவர் சிவகுமார் தெரிவித்தார். அவர்களின் விவரம்
1.சிவகுமார் (C)
2.ராஜேஷ்குமார்(Vc)
3.பார்த்திபன்(Wk)
4.பொன்ராஜ்
5.ரமேஷ்
6.பதி
7.மணி
8.ஆறுமுகம்
9.யுவா
10.அருண்குமார்
11.ஜெயபிரகாஷ்
12.சொரிமுத்து
13.இப்ராஹிம்
14.முருகன்
15.விஜய்குமார்.

மதுரை மாவட்டம் சமயநல்லூர் செய்தியாளர்
AC.அருண்குமார்

1,077 total views, 2 views today

Leave a Reply

Registration

Forgotten Password?

Close