மாதந்தோரும் விலை உயரும் மண்ணெண்ணெய்!

2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையிலான 10 மாதங்களுக்கு 1 லிட்டர் மண்ணெண்ணெய்க்கு 25 காசுகள் வீதம் மாதாமாதம் விலை உயர்வு செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இப்படி விலை உயர்த்தினால் சர்வதேச சந்தையின் விலைக்கு நிகராக மண்ணெண்ணெய் விலை வந்துவிடும்.அப்போது மானியச்சுமை வெகுவாக குறையும் என்று மத்திய அரசு கூறுகிறது.தற்போது 1 லிட்டர் மண்ணெண்ணெய் விற்பனையில் எண்ணெய் நிறுவனல்களுக்கு ரூ13.12 இழப்பு ஏற்படுகிறது.

இதில் மத்திய அரசு 12 ரூபாயை மானியமாக வழங்குகிறது.மீதி இழப்பை ஒ.என.ஜி.சி. மற்றும் ஆயில் இந்தியா நிறுவனங்கள் ஏற்றுக் கொள்கின்றன. அந்த வகையில் மத்திய அரசின் ஒட்டு மொத்த மானியச் சுமை ரூ27ஆயிரத்து 521கோடி. இதில் மண்ணெண்ணெய்யின் பங்கு 42 ஆயிரம் என்று கணக்கு சொல்லப்படுகிறது.

முன்பு பெட்ரோல், டீசல்,மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகிய 4 வகை எரிபொருளுக்கு மத்திய அரசு மானியம் வழங்கியது. பின்னர் பெட்ரோல், டீசலுக்கு மானியம் இல்லை.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படும் என அறிவித்து,அதன் விலையை கண்டபடி உயர்த்தி விட்டது.

1பீப்பாய் கச்சா எண்ணெய் சர்வதேச சந்தையில் 140 டாலராக விற்ற போது இந்தியாவில் 1 லிட்டர் பெட்ரோல் 62 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இப்போது சர்வதேசசந்தையில் 1பீப்பாய் கச்சா எண்ணெய் 40 ரூபாய்.ஆனால் இந்தியாவில் 1லிட்டர் பெட்ரோல் 62 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.இதுதான் சர்வதேச சந்தைக்கு ஏற்ப மத்திய அரசு நிர்ணயிக்கும் விலை.

இது மாதிரியான கொள்கையை ஏழைகள் மட்டுமே பயன்படுத்தும் மண்ணெண்ணெய்யிலும் அடிக்க மத்திய அரசு முடிவு செய்து விட்டது. இதனால் ஏழைகள் பாடு படு திண்டாட்டமாகிவிடும். அடுத்து மத்திய அரசு கை வைப்பதற்கு சமையல் எரிவாயு மட்டுமே பாக்கியா. இருக்கிறது.

தற்போது சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மத்திய அரசு 116 ரூபாய் மானியம் தருகிறது. ஏழைகள் பயன்படுத்தும் மண்ணெண்ணெய்யில் கை வைத்து விட்ட மத்திய அரசு,சமையல் எரிவாயு விலை எப்போது கை வைக்கப் போகிறதோ?தெரியவில்லை. இப்படி கை வைப்பதற்குள் மத்திய அரசு மாறினால் மக்கள் தப்பிப்பார்கள்.

.பொதுநலத்துடன்

முஹம்மது பஹ்ருல்லா ஷா 

 

 

1,020 total views, 4 views today

Top

Registration

Forgotten Password?

Close