பொன்னமராவதி ஜூன் 10

பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் கிராமத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச அடையாள அட்டை ,பெல்ட் வழங்கும் விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் கிராமத்தில் அக்னி சிறகுகள் விளையாட்டு மற்றும் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் கண்டியாநத்தம் நடுநிலைப் பள்ளி மற்றும் க.புதுப்பட்டி மாணவமாணவிகளுக்கு இலவச அடையாள அட்டை மற்றும் பெல்ட் வழங்கும் விழா நடைபெற்றது.இதில் பொன்னமராவதி தொழிலதிபரும் அண்ணாமலை ரெசிடென்சி உரிமையாளர் ஜெயராமன் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு அடையாள அட்டை களை வழங்கினார். அக்னி சிறகுகள் இளைஞர் நற்பணி மன்ற கணக்காளர் பெரிய சுப்பையா வரவேற்றார்.அதனை தொடர்ந்து சமூக ஆர்வலர் சுப்பிரமணியம் அவருக்கு மனிதநேய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.
இதில் பி.எஸ்.என்.எல் முன்னாள் உதவி மேலாளர் கருப்பையா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன்,கண்டியாநத்தம் பள்ளி தலைமையாசிரியர் வெண்ணிலா, புதுப்பட்டி தலைமையாசிரியை ,கூட்டுறவு துணைத்தலைவர் அழகு, அக்னி சிறகுகள் தலைவர் சங்கர்,மன்ற ஆலோசகர் தியாகராஜன்,சத்துணவு அமைப்பாளர் வத்துமலை ராசு, பள்ளி மேலாண்மை குழு தலைவி யசோதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

785 total views, 3 views today