மழையால் பாதிக்கபட்ட மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கிய கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது

தற்போது

இராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஏர்வாடி அருகே S.K நகர் பகுதியில் மழையின் காரணமாக தண்ணீர் தேங்கியுள்ளதால் பெரும்பாலான மக்கள் அன்றாடம் தேவையான உணவு சமைக்க கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அன்றாட வாழ்வு மிகவும் பாதிப்புக்குள்ளானது.

இத்தகவலின் அடிப்படையில் கீழக்கரை கிளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தன்னார்வலர்கள் உடனே அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்து, அப்பகுதி மக்களுக்கு உணவு பொருட்களை உடனடியாக தயார் செய்து அப்பகுதி மக்களுக்கு சென்று வழங்கினர்

342 total views, 3 views today