மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி திருவாரூர் மாவட்டம் அடவங்குடியில் இஸ்லாமியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்

0
0

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக் கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில்
பிப்ரவரி 29ஆம் தேதி தமிழகம் முழுவதும் தர்ணா போராட்டத்தை அறிவித்து நடத்திவருகிறது.

திருவாரூர் மாவட்டம் அடவங்குடியில் இந்தியன் வங்கி அருகில் நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு கிளை தலைவர் யாசர் அரஃபாத் தலைமை வகித்தார்.
இதில் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக் கோரி முழக்கங்கள் எழுப்பினர்.

கலந்துகொண்ட மாவட்ட பேச்சாளர் ஆசாத் அலி மற்றும் ஈஷா இருவரும் பேசியபோது.

குடியுரிமை திருத்த சட்டம் இந்திய மக்கள் அனைவருக்கும் எதிரானதாகும்.இந்திய குடியுரிமை பெற்றவர் என்பதை நிரூபிக்க ஒருவர் தனது பிறப்புச் சான்று முதல் தகப்பனார் பாட்டனார் பிறப்புச் சான்றிதழை வரை சமர்ப்பிக்க வேண்டும் என சட்டம் சொல்கிறது.

இந்தியாவில் வாளும் இந்து முஸ்லிம் கிறிஸ்தவர்கள் பலரும் பாதிக்கப்பட்டு அகதி பட்டியலிலேயே சேர்க்கப்படுவார்கள்.

அசாமில் அகதிகளாக குடியேறிய மக்களை கண்டறிய இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதாக மத்திய அரசாங்கம் சொல்லிவிட்டு தற்போது கொல்லைப்புறமாக இந்தியா முழுவதும் இக்கொடிய சட்டத்தை நடைமுறைப்படுத்த முயல்கிறது.

தமிழகத்தில் வாழுகிற மக்கள் பாகிஸ்தான் பங்காளதேஷ் ஆப்கானிஸ்தானில் இருந்து அகதியாக வந்தவர்கள் இல்லை என்கிற பொழுது இவர்களுக்கு இந்த சட்டம் எப்படி பொருந்தும் இவர்கள் ஏன் தனது குடியுரிமை நிரூபிக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

இலங்கையிலிருந்து வந்த தமிழர்கள் பல ஆண்டுகளாக தமிழகத்தில் குடியுரிமை கேட்டு வருகின்றனர் அவர்களுக்கு மத்திய அரசு குடியுரிமை மறுத்து இருப்பது கண்டனத்திற்குரியது.

தமிழகத்தில் கிராமங்களில் வசிக்கும் மக்கள் பிறப்புச் சான்றிதழ் வைத்திருக்க மாட்டார்கள் இவர்கள் அனைவருமே NRC சட்டத்தில் பாதிக்கப்படுவார்கள் என்பது தெரிந்தும் தமிழக அரசாங்கம் அமைதி காப்பது வேதனையளிக்கிறது.

CAA,NRC, NPR, சட்டத்தை ஆதரித்த பல மாநில முதல்வர்கள் கூட தற்போது அந்த சட்டத்தை எதிர்த்து வருகிறார்கள்.மேற்கு வங்கம்,பஞ்சாப் ,பீகார், தெலுங்கானா, பாண்டிச்சேரி, கேரளா ,மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ,உள்ளிட்ட மாநிலங்களில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி அம்மாநில மக்களின் உரிமையை மாநில அரசாங்கம் பாதுகாத்தது போல தமிழக மக்களின் உரிமைகளை பாதுகாக்க குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக அரசாங்கம் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அவர் பேசினார்.

I.முகம்மது யாசீர் H.யாசர் அரஃபாத் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் கிளைத் தலைவர் யாசர் அரஃபாத் அவர்கள் நன்றியுரையுடன் தர்ணா நிறைவுற்றது

66 total views, 3 views today