கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காட்டில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் பத்தாம் திருவிழாவை முன்னிட்டு இன்று லட்சகணக்கானவர்கள் சுவாமி தரிசனம் செய்தனர், அதே போன்று பொங்கல் வைத்தும், கொழுக்கட்டை படைத்தும் வழிபாடு மேற்கொண்டனர்.

#038;autoplay=0&cc_load_policy=0&iv_load_policy=1&loop=0&modestbranding=0&rel=1&fs=1&playsinline=0&autohide=2&theme=dark&color=red&controls=1&" class="__youtube_prefs__ epyt-is-override no-lazyload" title="YouTube player" allow="autoplay; encrypted-media" allowfullscreen data-no-lazy="1" data-skipgform_ajax_framebjll="">
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காட்டில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் ஆலயம், பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மீன பரணி கொடைவிழாவின் போது கேரளா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள் இருமுடி கட்டி அம்மனை தரிசனம் செய்வது வழக்கம் , அதன் படி இந்த ஆண்டிற்கான மீன பரணி கொடைவிழா கடந்த 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது, ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள் மற்றும் சுவாமி ஊர்வலமும், வலிய படுக்கை பூஜை, சக்கர தீவட்டி ஊர்வலம் போன்ற பல்வேறு பாரம்பரிய பூஜைகளும் நடைபெற்றன, பத்து நாள் திருவிழாவின் கடைசி நாளான இன்று தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த பெண்கள் குழந்தைகள் உட்பட லட்சக்கணக்கானோர் கோவிலுக்கு வருகை தந்ததால் கோவிலின் எந்த பகுதியை பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதியது, அதி காலை முதல் குடும்பத்துடன் வருகை தந்த பக்தர்கள் அங்கு பொங்கல் வைத்தும் கொழுக்கட்டை உள்ளிட்டவற்றை படைத்து அம்மனை வழிபட்டனர், இது குறித்து பக்தர்கள் கூறும் போது இந்த கோவிலில் ஆண்டு தோறும் நடைபெரும் மீன பரணி கொடைவிழாவில் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது தங்களின் நம்பிக்கை அதன் படி இன்று தங்கள் குடும்பத்துடன் வந்து அம்மனை தரிசித்து செல்வதாக கூறினார், விழாவின் சிகர நிகழ்ச்சியான ஒடுக்கு பூஜை இரவு 12 மணிக்கு நடைபெற்றது , இந்த திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டடத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு உள்ளது, மேலும் 1000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

மீடியா 7 செய்திகளுக்காக குமரியிலிருந்து செய்தியாளர் கிரீஷ் குமார் உடன் ஒளி பதிவாளர் அரவிந்த் குமார்

 1,145 total views