மணப்பாறை, வையம்பட்டி தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி.

img-20161225-wa0019

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நகரின் மத்தியில் அமைந்திருக்கும் மிக பலமை வாய்ந்த கிறித்துவ பேராலயம் புனித லூர்து அன்னை ஆலயம் கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி வண்ண மின்விளக்குகளால் அலங்காரிக்கப்பட்டிருந்தது. ஆண்டவர் பிறக்கும் குடில் ஜொலித்த்து. ஆலயத்தில் மணப்பாறை மறைவட்ட முதன்மை குரு அருட்தந்தை சகாயராஜ் தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இயேசு கிறிஸ்து பிறந்தபோது இறைதூதர்கள் பாடிய இசை பாடல் அனைவராலும் பாடப்பட்டது. இதில் மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் பங்குபெற்றனர். அனைவரும் தங்களது கிறிஸ்துமஸ் தின மகிழ்ச்சியை உடன் இருந்தவர்களிடம் பரிமாறிக்கொண்டனர்.
அதேபோல் மணப்பாறை அடுத்த வையம்பட்டி புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் திருச்சி குரு குல முதல்வர் யூஜின் தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
இதில் கிறிஸ்து பிறப்பு குடில் ATM போன்று வாசல் வைத்து அமைக்கப்பட்டிருந்தது. நாம் தற்போது தினம்தோறும் நிற்கும் ATM-யை விட அன்பு (A), தயவு (T), மன்னிப்பு (M) – என்பது தான் ஆண்டவரை அடையும் ATM என பங்குதந்தை ஜான் பிரிட்டோ விளக்கம் அளித்து புதிய ஏற்பாடு வாசகங்களை வாசித்தார். குடிலில் விண்ணுலக தேவதை, கிறிஸ்துமஸ் தாத்தா என காண்போரை கவரும் வண்ணம் குடில் இருந்தது.
இந்த ஆலய பங்கில் முதல் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி இது என்பது குறிப்பிடதக்கது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

642 total views, 2 views today

Leave a Reply

Registration

Forgotten Password?

Close