மணப்பாறை 20வது வார்டு பாத்திமாமலை சிவசக்தி நகர் அப்துல்கலாம் பூங்காவில் இன்று காலை 8.30 மணிக்கு அப்துல்கலாம் கனவு இளைஞர்கள் அமைப்பு சார்பில் மக்கள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல்கலாம் பிறந்த நாள் விழா நடந்தது.

விழாவுக்கு நகர்மன்ற உறுப்பினர் எஸ்.ராமன் தலைமை வகித்தார்.

முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஏ.பி.சரவணன், ஓய்வுபெற்ற காவல் துணை ஆய்வாளர் பரமன், மின்வாரிய அலுவலர் நேவின், ரஜினி ரசிகர்மன்றத் தலைவர் கே.எம்.பி.பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் பங்கேற்று மதிமுக மாநில மாணவர் அணிச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் சிறப்புரையாற்றினார்.

அப்துல்கலாம் படத்திற்கு தியாகி பாலன், இருதயராஜ், தர்மராஜ், முருகேசன், பெல் சின்னு, கொத்தனார் சேசு, எலக்ட்ரீசன் சேட்டு, அ.கிருஸ்ணமூர்த்தி, மு.தவசி, சி.ராஜகோபால், சிராஜ், வீராசாமி, ரவி, பழக்கடை சேட்டு, முத்துராஜ், சரஸ்வதி, ஜெயசீலி, எஸ்.சரிதா பானு, மலர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை தம்பிகள் ஜான்பீட்டர், லாரன்ஸ், டேவிட், அன்புரோஸ், அமீர், ரகுமான், எட்வின், பிரபு, தமிழ்ச்செல்வன், நந்து, சக்திவேல், தீனதயாளன், சகாயம் மற்றும் அப்துல்கலாம் கனவு இளைஞர்கள் அமைப்பினர் செய்திருந்தனர்.

அனைவருக்கும் லட்டு வழங்கப்பட்டது.

 537 total views