மசூதிகளில் ஒலிபெருக்கிகளுக்கு கட்டுப்பாடு: இஸ்லாமிய கூட்டமைப்பு யோசனை

திருவனந்தபுரம்: மசூதிகளில் ஒலிபெருக்கிகள் பயன்பாட்டுக்கு சில கட்டுப்பாடுகளை, கேரள சன்னி மகல்லு கூட்டமைப்பு விதித்துள்ளது. 

சுமார் 8 ஆயிரம் மசூதிகளை தன் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள இந்த அமைப்பின் சமீபத்திய கோழிக்கோடு கூட்டத்தில் எடுத்த முடிவுகள் குறித்து கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் முஸ்லிம் லீக் தலைவருமான பனக்காடு ஹைதரலி ஷிகாப் தங்கல் கூறுகையில், ” மசூதிகளில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துமபோது அவை பொதுமக்களுக்கு இடைஞ்சல் தரா வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். முக்கியமான அறிவிப்புகள் மற்றும் தொழுகைக்கான அழைப்பிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். சமுதாய நல்லிணக்கத்தைப் பாதிக்கும் எந்த செயலிலும் இஸ்லாமியர்கள் ஈடுபடக்கூடாது. எந்த பிரச்னையையும் மிகவும் கவனமாக சிந்தித்து கையாள வேண்டும்” என்றார்.
இஸ்லாமிய அமைப்புகள் வரவேற்பு:

கூட்டமைப்பின் முடிவை பல்வேறு இஸ்லாமிய தலைவர்கள் வரவேற்றுள்ளனர். ஜமாத்-இ-இஸ்லாமி தலைவர் முகமது கரக்குன்னு இது குறித்து கருத்து தெரிவிக்கையில், ஒரு பகுதியில் உள்ள பல்வேறு மசூதிகளில் பல்வேறு நேரங்களில் ஒலிபெருக்கி மூலம் தொழுகைக்கான அழைப்பு விடுக்கப்படும்போது, அது அப்பகுதி மக்களுக்கு சிரமத்தைக் கொடுக்கும். தற்போதுள்ள சமுதாய சூழ்நிலையில் மகல்லு கூட்டமைப்பின் முடிவு மிகவும் பொருத்தமானதே என்றார்.


அகில இந்திய இஸ்லாகி இயக்கத்தின் பொதுச் செயலாளர் உசைன் மடவூர் கூறுகையில், இந்த யோசனை பொதுமக்களுக்கு நிம்மதியைக் கொடுக்கும். மதச்சார்பற்ற கலாச்சாரத்தை வலுப்படுத்தும். ஒரு பகுதியில் உள்ள ஒரு மசூதியிலிருந்து மட்டுமே ஒலிபெருக்கி மூலம் தொழுகை அழைப்பு விடுத்தால் போதுமானது. அந்த பகுதியில் உள்ள அனைத்து மசூதிகளிலுமிருந்து தனித்தனியாக ஒலிபெருக்கி மூலம் அழைப்பு விடுக்கத் தேவையில்லை என்றார்.

1,454 total views, 2 views today

Top

Registration

Forgotten Password?

Close