மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: மேரி கோம் அரையிறுதியை இழந்து, வெண்கலத்தை வென்றார்.

மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: மேரி கோம் அரையிறுதியை இழந்து, வெண்கலத்தை வென்றார்.

உலன் உடே

11-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது.

பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனைகள் மேரிகோம், மஞ்சு ராணி, ஜமுனா போரோ, லவ்லினா ஆகியோர் அரைஇறுதிக்கு தகுதி பெற்றதுடன் பதக்கத்தையும் உறுதி செய்து உள்ளனர்.

இதில் அரையிறுதியில் துருக்கியின் பஸ்னாஸ் சகிரோக்லுவுடன் மோதிய மேரி கோம் தோல்வியுற்றதால் வெண்கலப் பதக்கம் உறுதியானது

51 கிலோ உடல் எடைப்பிரிவில் மேரிகோம் பதக்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும். 2012-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரான மேரிகோம் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 6 தங்கப்பதக்கமும் (2002, 2005, 2006, 2008, 2010, 2018), ஒரு வெள்ளிப்பதக்கமும் (2001) வென்றுள்ளார். 8-வது பதக்கத்தை உறுதி செய்து இருப்பதன் மூலம் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக பதக்கம் வென்றவர் என்ற பெருமையை மேரிகோம் பெற்றுள்ளார். இதற்கு முன்பு கியூபா வீரர் பெலிக்ஸ் சவோன் உலக குத்துச்சண்டையில் 7 பதக்கம் (6 தங்கம், ஒரு வெள்ளி) கைப்பற்றியதே சாதனையாக இருந்தது.

81 total views, 3 views today