போடி அருகே குரங்கணியில் 40 கல்லூரி மாணவர்கள் காட்டுத்தீயில் சிக்கிய பகுதிக்கு ஆட்சியர் விரைந்தார்

*MEDIA 7 BREAKING*

*போடி அருகே குரங்கணியில் 40 கல்லூரி மாணவர்கள் காட்டுத்தீயில் சிக்கிய பகுதிக்கு ஆட்சியர் விரைந்தார்*

தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் காட்டுத்தீயில் மாணவிகள் சிக்கியுள்ளதாகத் தகவல்.

மாணவிகளை மீட்கும் முயற்சியில் ஊர்மக்கள், வனக்காவலர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

காட்டுத்தீயில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்க விரைகிறது விமான படை.

முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக்கொண்டதையடுத்து, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமான படைக்கு உத்தரவு.

மாணவர்களை மீட்டுவர எல்லா முயற்சியும் எடுக்கப்படும் – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

தேனி – குரங்கணி காட்டுத்தீயில் சிக்கியிருந்த மாணவர்களில் 7 பேர் பத்திரமாக மீட்பு.. மற்றவர்களையும் மீட்க வனத்துறை, தீயணைப்புத்துறை தீவிரம்.

குரங்கணி மலைப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ.

கொழுக்குமலை என்ற இடத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 40க்கும் மேற்பட்ட மாணவிகள் சிக்கியுள்ளனர்.

மலையேறும் பயிற்சியில் ஈடுபட்ட போது கல்லூரி மாணவிகள் காட்டுத்தீயில் சிக்கியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காட்டுத்தீயில் சிக்கித் தவிக்கும் மாணவிகளை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரம்.

தகவல் அறிந்து தேனி மாவட்ட ஆட்சியர், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

காட்டுத்தீயில் சிக்கியுள்ள மாணவிகளை ஹெலிகாப்டர் மூலம் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்ட கலெக்டரை தொடர்பு கொண்டு விமானப்படை மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்ட ஆட்சியருடன் தொலைபேசி மூலம் பேசினேன் – நிர்மலா சீதாராமன்.

10 முதல் 15 மாணவர்கள் மலையின் அடிவாரத்திற்கு இறங்கி வந்து கொண்டிருக்கிறார்கள் – நிர்மலா சீதாராமன்.

மீட்பு பணியில் தீயணைப்பு படை மற்றும் வனத்துறை அதிகாரிகள் தீவிரம் – நிர்மலா சீதாராமன்.

மீடியா 7 செய்திகளுக்காக நேரலை செய்தியாளர் கானொலி பதிவுகளோடு சென்னை அருண்…

191 total views, 2 views today

Top

Registration

Forgotten Password?

Close