போக்குவரத்து போலீசாரால் தொடரும் மரணம் சென்னை அம்பத்தூர்!

February 2, 2018 0 By KANNIIYAPPAN AN

போக்குவரத்து போலீசாரால் தொடரும் மரணம்
சென்னை அம்பத்தூர்

அம்பத்தூரில் இருந்து மதுரவாயல் செல்லும் புறவழி சாலையில் அத்திப்பட்டு பகுதியில் போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனை ஈடுபட்டு இருந்தனர். ஈச்சர் வாகனத்தை நடுவழியில் நிறுத்தி சோதனை செய்தனர் அந்த வாகனத்தின் ஓட்டுநர் கதவை திறந்து கிழ இறங்க முற்பட்டார் அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த தியாகராஜன் வயது 30 வலது புறம் ஒதுங்க நினைத்தார் அப்போது எதுர்பாராத விதமாக பின்னால் வந்த டாஸ்மாக் வாகனம் ஏறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் அவருடன் வந்த அவரின் மனைவி அதிஷ்ட வசமாக உயிர் தப்பினார்

விபத்து காரணம் போக்குவரத்து காவல்துறையினர் என கூறி பொதுமக்கள் அங்கு பல வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு.
மேலும் மதுரவாயல் புறவழிச்சாலையில் ஒரு மணி நேரம்போக்குவரத்துக் பாதிப்பு ஏற்பட்டது தொடர்ந்து இது போன்ற விபத்து இங்கு நடை பெறுவதாக பொது மக்கள் குற்றச்சாட்டு.

ஒரு நூறு ரூபாய் காசுக்காக ஒரு உயிரை பரித்துவிட்டனர் என்று அங்கு கூடி இருந்த வாகனஒட்டிகளும் பொதுமக்களும் திட்டிக்கொண்டவாறு களைந்து சென்றனர்.

செய்தியாளர்
கண்ணியப்பன் A N
கதிரவன் R

535 total views, 3 views today