போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக்… வெறிச்சோடிய கோயம்பேடு பேருந்து நிலையம்… பொதுமக்கள் அவதி !

January 5, 2018 0 By KANNIIYAPPAN AN

போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக்… வெறிச்சோடிய கோயம்பேடு பேருந்து நிலையம்… பொதுமக்கள் அவதி .

ஊதிய நிலுவைத்தொகை, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் போக்குவரத்து துறை ஊழியர்களோடு அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனை அடுத்து, கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். வழக்கமாக வெளியூரில் இருந்து வருபவர்கள், கோயம்பேடு மார்க்கெட் வரும் வியாபாரிகள், பொதுமக்கள் என காலையில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் கோயம்பேடு பேருந்து நிலையம் இன்று வெறிச்சோடி காணப்படுகிறது

சென்னை செய்துயாளர்
வில்சன் P P

358 total views, 2 views today