பொள்ளாச்சி பெண்கள் துன்புறுத்தல் வழக்கில் எவ்வித அரசியல் தலையிடும் இல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் பேட்டி!

பொள்ளாச்சி பெண்கள் பாலியல் துன்புறுத்தல் வழக்கு தொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது
இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட 4 பேரும், புகார் அளித்த பெண்ணின் சகோதரரை மிரட்டியதாக 4  கைது செய்யப்பட்டுள்ளனர்
முதற்கட்ட விசாரணையிலேயே தேவையான தகவல்கள் பெறப்பட்டுள்ளது.எனவே தேவைப்பட்டால் குற்றவாளிகளை மீண்டும் விசாரிக்கப்படுவார்கள் என்றார்.தற்போதுவரை 4 வீடியோக்கள் மட்டுமே அவர்களது செல்போனில் இருந்தது.இந்த வழக்கில் அரசியல் தொடர்புகளோ தலையீடுகளோ இல்லை.இவ்வழக்கு
விசாரணையில் 4 பேர் மட்டுமே  தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது
முக்கிய குற்றவாளிகள் 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் அவர்களால் பாதிக்கப்பட்ட பெண்களை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
கண்டறியப்பட்ட பின் அவர்களுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த பாலியல் துன்புறுத்தல் விவகாரம்
தொடர்பாக கடந்த 24 ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது
இதில் 3 பேர் 25 ம் தேதி கைது செய்யப்பட்டனர்.மிக முக்கிய குற்றவாளி திருநாவுகரசு மார்ச் 5 ம் தேதி கைது செய்யப்பட்டார்.வழக்கு தொடர்பாக தவறாக செய்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
தற்போது வேண்டும் என்று சமூக விரோதிகளால் உள் நோக்கத்துடன் தவறான தகவல் பரப்பபடுகின்றது
மேலும்100 வீடியோக்கள் இருப்பதாக சொல்லப்படுவது தவறான தகவல்.
இந்த 4ல்வர் மீது கற்பழிப்பு புகார் இல்லை. வேறு யாராவது புகார் அளித்தால் வழக்கு பதிவு செய்யப்படும்.
கடந்த 3 ஆண்டுகளில் பொள்ளாச்சியில் நடந்துள்ள தற்கொலை சம்பவங்கள் முழுமையாக விசாரிக்கப்படும்
திருநாவுக்கரசு பெண் தோழியிடம் (காதலி) தொடர்பு இருப்பதாக தெரிந்தால் விசாரணை நடத்தப்படும்
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான
திருநாவுக்கரசு கல்லூரி நாட்களில் இருந்தே இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அந்த நான்கு காணொளிகளில் இருந்து பாதிக்கப்பட்ட இரு பெண்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் தேவைபடும்பட்சத்தில் திருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிப்போம் என்றார்.
குற்றவாளிகளை கைது செய்து சில நாட்கள் ஆகிய நிலையிலும் வதந்திகள் பரவி வருகிறது எனவே இதை தெளிவு படுத்தும் விதமாகவே இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பு என்றார்.

1,862 total views, 3 views today

Registration

Forgotten Password?

Close