பொன்னமராவதி அருகே அம்மன் குறிச்சியில் வைகாசி பொங்கல் திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே அம்மன் குறிச்சி முத்து மாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா வருடா வருடம் கொண்டாடப்பட்டு வருகிறது .அதேபோல் இந்த வருடமும் வைகாசி திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டது .சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அருகில் உள்ள ஊரணியில் தண்ணீர் எடுத்து அதில் பொங்கல் வைத்தும், மாவிளக்கு வைத்தும் வைகாசி பொங்கல் விழாவை கொண்டாடினர்.

இதில் அம்மன்குறிச்சி ,சொக்கநாதபட்டி, அம்மாபட்டி ,கல்லம்பட்டி ,ஆலவயல் ,கண்டியாநத்தம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபாடு செய்தனர்.

பொன்னமராவதி பகுதி செய்திகளுக்காக சிவராமகிருஷ்ணன்

139 total views, 3 views today

Registration

Forgotten Password?

Close