பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்யும் சாலையோர வியாபாரிகளை வியாபாரம் செய்ய விடாமல் தடுக்கும் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், இதர பேரூராட்சி பேருந்து நிலையங்களில் வியாபாரம் செய்வதை போல பொன்னமராவதி பேருந்து நிலையத்திலும் அனுமதி வழங்கக் கோரியும், பொன்னமராவதி பேரூராட்சியில் உள்ள கோழி கழிவுகள் மக்களை பாதிக்காத வகையில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும, தமிழக அரசு அறிவித்த படி பொன்னமராவதி பேருராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தி செயல்படுத்த வேண்டும், பேரூராட்சி நிர்வாகம் தீர்மானித்த மகமை கட்டணத்தை தகவல் பலகை மூலம் தெரிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி
பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரே புதுக்கோட்டை மாவட்ட சாலையோர வியாபாரிகள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் சிஐடியு வின் பொன்னமராவதி கிளையின் சார்பில் கிளையின் தலைவர் எம்.அய்யாவு அவர்கள் தலைமையில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட தலைவர் க.செல்வராஜ் சிஐடியு மாவட்ட செயலாளர் க.முகமது அலி ஜின்னா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ.தீன், அனைத்து போக்குவரத்து சங்கத்தின் என்.பகுருதீன் ஆகியோர் கோரிக்கை ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், கிளை பொருளாளர் எஸ். கண்ணன், கிளை துணைச் செயலாளர்கள் செ.சௌந்தரம், ஏ.நல்லு, கிளை நிர்வாகிகள் வி. பஞ்சவர்ணம், வி.எஸ். ஆர். கனி, சி.சுப்ரமணி,எம்.புரோஸ்கான்,
ஏ.ஒய்யம்மாள்,கட்டுமான தொழிலாளர் சங்க பொறுப்பாளர் பி.சிங்காரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

691 total views, 3 views today