பேட்டரி வாகன உற்பத்தி அதிகரிப்பால் காப்பர் தேவை உயரும்

June 20, 2017 0 By Novian Aslam

புதுடெல்லி :

வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பெட்ரோல், டீசல் தேவையும் உயர்கிறது. இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் விலையில் தினந்தோறும் ஏற்படும் மாற்றத்தால், பெட்ரோல், டீசல் விலையிலும் ஏற்ற இறக்கம் காணப்படுகிறது. இதற்கேற்ப மின்சார பயன்பாட்டில் இயங்கக்கூடிய பேட்டரி கார் உற்பத்தி மீது நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகின்றன. இந்த கார் உற்பத்தியில் காப்பர் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே காப்பருக்கான தேவை வருங்காலங்களில் ஒன்பது மடங்காக உயரும் என சர்வதேச காப்பர் அசோசியேசனால் (ஐ.சி.ஏ.) நியமிக்கப்பட்ட ஆலோசனை குழு தெரிவித்துள்ளது.

பேட்டரி கார்கள் மற்றும் பஸ்கள் தயாரிப்பதற்கான காப்பரின் தேவை தற்போது உள்ள 1,85,000 டன்களில் இருந்து 17.4 லட்சம் டன்களாக 2027ல் உயரும். இந்த பேட்டரி கார்களின் மின்சார மோட்டர்களில் உள்ள சுற்றுகளில் அதிகளவிளான காப்பர் பயன்படுத்தப் படும். ஒரு பேட்டரி காரில் சுமார் 6 கிமி நீளத்திற்குரிய காப்பர் வயர் பயன்படுத்தப்படுகிறது. இதுவே பேட்டரி கார்களின் தயாரிப்புக்கான காப்பர் தேவையை அதிகரிக்கச் செய்கிறது” என ஆய்வில் ஈடுபட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

200 total views, 2 views today