பெரியாரின் சீர்திருத்த கொள்கைகளை திராவிட கட்சிகள் புதைத்து விட்டன: பிருந்தாகரத் பேச்சு

கோவை, செப்.10–
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோவை மாவட்ட குழு சார்பில் அம்பேத்காரின் 125–வது பிறந்த நாளை முன்னிட்டு தீண்டாமை வன்கொடுமைகளுக்கு எதிரான சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது. மாநில துணைப் பொதுச் செயலாளர் சிவஞானம் தலைமை தாங்கினார்.
இதில் சிறப்பு விருந்தினராக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–
இன்றைய மத்திய அரசு முதலாளிகள் நன்மை குறித்து சிறப்பு விவாதங்கள் நடத்தி வருகின்றன. ஆனால் தலித் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற சிறப்பு விவாதங்கள் நடத்துவது இல்லை.
மக்களவையில் தீண்டாமை குறித்து சிறப்பு விவாதங்கள் நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய மாநாட்டில் தீர்மனம் நிறைவேற்றியது. ஆனால் பெரு நிறுவன முதலாளிகளுக்கான நேரம் ஒதுக்கி விவாதம் நடத்தும் மத்திய அரசு தலித் மக்களுக்கு நேரம் ஒதுக்கி விவாதிக்க தயாராக இல்லை.
இதுதான் மோடி அரசின் குணாதிசயம். இந்து மதவாத சக்திகள் தலித்துகள் மற்றும் பழங்குடியின மக்களை மதமாற்றம் செய்து வருகிறது. அடக்குமுறையினால் தலித் மக்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது. இதற்கு எதிராக போராட வேண்டும்.
தமிழகத்தில் திராவிட கட்சிகள் என்று சொல்லிக்கொள்ளும் தி.மு.க., அ.தி.மு.க., தற்போது பெரியாரின் சமூக சீர்திருத்த கொள்கைகளை புதைத்து விட்டு வாக்கு வங்கி அரசியல் நடத்துகிறார்கள்.
சம உரிமை மூலமே பொருளாதார ஏற்றத்தாழ்வை சீர் செய்ய முடியும் என்றார் அம்பேத்கார். சாதி மறுப்பு திருமணம் செய்யும் இளைஞர்கள் தாக்கப்படுகிறார்கள். இத்தகைய ஒடுக்குமுறையை எதிர்த்து போராட வேண்டும்.
தனியார் துறையில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வேண்டும். மேலும் தலித் மக்களுக்கு அவர்களது விகிதாச்சார அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

1,175 total views, 0 views today


Related News

  • கோவை மாநகராட்சியை முற்றுகையிட முயன்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 150 பேர் கைது
  • கோவையில் பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சாா்பில் கையெழுத்து இயக்கம் நடத்தியது.
  • உக்கடம் பகுதியில் குடும்பத்தகராறில் தூக்குப்போட்டு வியாபாரி தற்கொலை
  • விநாயகர் சதுர்த்தியன்று 24 மணிநேரமும் அலுவலர்கள் கண்காணிப்புடன் இருக்க வேண்டும்: கலெக்டர்
  • கோவை வணிக வரி அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற டீக்கடைக்காரர் சிறையில் அடைப்பு
  • பெரியாரின் சீர்திருத்த கொள்கைகளை திராவிட கட்சிகள் புதைத்து விட்டன: பிருந்தாகரத் பேச்சு
  • கோவையில் அனுமதியின்றி செயல்பட்ட 2 தனியார் காப்பகங்களில் தங்கி இருந்த 44 குழந்தைகள் மீட்பு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
  • கோவை அருகே கைதான மாவோயிஸ்டுகள் 5 பேர் கோவை கோர்ட்டில் ஆஜர்
  • Leave a Reply