பெரியகுளம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைக்க முயன்ற மாவட்ட காவல்கண்காணிப்பாளர் உட்பட காவல்துறையினர் 10 பேருக்கு காயம்

தேனி மாவட்டம் , பெரியகுளம் அருகே உள்ளஇலட்சுமிபுரத்தைச் சேர்ந்த முரளி என்பவருக்கும்சருத்துப் பட்டியைச் சேர்ந்த ரஞ்சித்என்பவருக்குமிடையே கடந்த நான்குதினங்களுக்கு முன்புநடந்த தகராறில்காயமடைந்த முரளி என்பவர் மதுரை தனியார்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனைத் தொடர்ந்து இலட்சுமிபுரம் பகுதி பொது மக்கள் நேற்று முன்தினம் முரளியைத் தாக்கியசருத்துப் பட்டியைச் சேர்ந்தவர்களைச்சேர்ந்தவர்களைக் கைது செய்யக் கோரி தேனி – பெரியகுளம் தேதிய நெடுஞ் சாலையில் திரண்டுசாலை மறியலில் ஈடுபட்டனர். அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களைசருத்துப் பட்டியைச் சேர்ந்தவர்கள் எனக் கருதிஇரண்டு பேரையும் இலட்சுமிபுரத்தைச்சேர்ந்தவர்கள் சரமாரியாகத் தாக்கியதில்காவல்துறையினர் அவர்களைமீட்டு விசாரித்தபோது இவர்கள் இருவரும் பெரியகுளம்தென்கரை இந்திரா புரியைச் சேர்ந்த அஜித்குமார், மற்றும் சுரேந்தர் ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரும்,பெரியகுளம் அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதனையறிந்த இவர்களது உறவினர்கள்பெரியகுளம் மூன்றாந் தல் பகுதியில் நேற்று அஜித்குமார், சுரேந்தர் ஆகியோரை த் தாக்கியஇலட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர்களை கைதுசெய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.இத்தகவல் அறிந்த பெரியகுளம் காவல்துணைக்கண்காணிப்பாளர் ஆறுமுகம் தலைமையில்பேச்சு வார்த்தை நடத்தியதில் குற்றவாளிகளைகைது செய்வதாகக் கூறியதையடுத்து மறியலைக்கை விட்டனர்.

இந்நிலையில் இதனைத் தொடர்ந்து இன்றுதேவதானப்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரியும்காவலர் சருத்துப் பட்டியைச் சேர்ந்த சிரஞ்சீவிஎன்பவர் தேவதானப்பட்டி காவல் நிலையத்திற்குஉட்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுஇருந்த போது அவரை மர்ம நபர்கள் தாக்கியதில்காயம் அடைந்தார் எனவும், அவர் பெரியகுளம்அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்து மனைமருத்துவ கல்லூரி மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு உள்ளார் அைவம்இவர்தாக்கப்பட்டது இலட்சுமிபுரத்தைச்சேர்ந்தவர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகதகவல் பரவியதையடுத்து சருத்துப் பட்டிவிலக்கில் பெரியகுளம் – தேனி தேசியநெடுஞ்சாலையில் சாலையில் சாலை மறியலில்ஈடுபட முயன்றவர்களைக் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்திக்கலைக்க முயன்ற போது காவல்துறையினர் மற்றும் அந்த பகுதிமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பின்மோதலாக மாறி காவல் துறையினர் தடியடிநடத்தவே சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கல்வீசித் தாக்கியதில் மாவட்டக் காவல்கண்காணிப்பாளர் பாஸ்கரன் உட்பட காவலர்கள்10 பேர் காயமடைந்து பெரியகுளம் அரசுமருத்துவமனையிலும், தேனி க.விலக்கு அரசுமருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும்சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் கண்அருகில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவரை தேனிமருத்துவ மனையில் இருந்து மேல் சிகிச்சைக்காகமதுரை மருத்து மனைக்குஅனுப்பி வைக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து இலட்சுமிபுரம், சருத்துப் பட்டிஆகிய பகுதிகளில் தாக்கப்பட்டவர்களும், தாக்கியவர்களும், வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்என்பதால் பதட்டம் நிலவுகின்றது மேலும்பதட்டத்தைத் தணிக்க நூற்றுக்கும் மேற்பட்டகாவல் துறையினர் குவிக்கப்பட்டு ரோந்துபணியில் ஈடுபட்டு வருகின்றனர். குற்றவாளிகளை கைது செய்யும்நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில்மோதலில் ஈடுபட்டவர்களைவிட்டு,விட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர்களை காவல் துறையினர் அத்துமீறி தாக்கியதில் சருத்துப்பட்டியை சேர்ந்த ஜெயக்கண்ணண், முத்து, முத்துநாகு, காளியம்மாள் ஆகிய நான்குபேர்களை 20 க்கும்மேற்பட்ட காவல்துறையினர் வீட்டின் மாடி ஏறிகுதித்து வந்து தாக்கியதாககுற்றசாட்டுஎழுந்துள்ளது. இவர்களும் தேனி அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடதக்கது.

446 total views, 3 views today