தேனி மாவட்டம் பெரியகுளம்  ரஹ்மத் பள்ளி வாசல் முன்பு சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரிம், தமிழக சட்டசபையில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை தடுத்து நிறுத்த தீர்மானம் நிறைவேற்ற கோரியும் பள்ளிவாசல் முன்பு  உள்ளிருப்பு போராட்டத்தில் 100க்கு மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பங்களா பட்டி விலக்கு அருகே ரஹமத் பள்ளிவாசல் முன்பு  சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெறக் கோரிம் . தமிழக சட்டசபையில் உரிமைச் சட்டத் திருத்தத்தை தடுத்து நிறுத்த தீர்மானம் நிறைவேற்ற கோரியும் இஸ்லாமிய இளைஞர்கள் இஸ்லாமிய பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் திடீரென ஈடுபட்டனர் இத்தகவல் அறிந்த பெரியகுளம் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆறுமுகம் தலைமையில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்  பெரியகுளம் பகுதியில் நேற்று டெல்லியில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை காவல்துறையில் தாக்கியதை கண்டித்து போராட்டம் நடைபெற்றது அதேபோல் இன்று இரண்டாவது நாளாக சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரிம், தமிழக சட்டசபையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை தடுத்து நிறுத்திட தீர்மானங்கள் நிறைவேற்ற கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் பெரியகுளம் பகுதியில் தொடர்ந்து  பல்வேறு கட்ட  போராட்டங்கள் குடியுரிமை  சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது இந்நிலையில் தற்போது இரவு நேரங்களில் இஸ்லாமியர்கள் ஒன்று கூடி  போராடி வருவது  குறிப்பிடத்தக்கது மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களிடம் பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் ஆறுமுகம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதே போல் இஸ்லாமிய இளைஞர்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக நள்ளிரவில் போராட்டம் நடத்தி வருவதால் பெரியகுளம் பகுதியில் பெரும் அளவில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளிருப்பு போராட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இளைஞரணி நூர் முகமது.தி.மு.க இளைஞரணி காஜா.செரீப்.உட்பட பலர் கலந்து கொண்டனர்

 387 total views,  2 views today