தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியில் அமைந்துள்ளது ஆதிதிராவிட மாணவியர் விடுதி. இந்த விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் 144 தடை உத்தரவின் காரணமாக அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அந்த விடுதியை சில தினங்களுக்கு முன்பு வருவாய் அலுவலர் பார்வையிட்டு கொரானோ வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் காவல்துறை. மருத்துவத்துறை. மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு உணவு சமைப்பதற்கு இந்த இடத்தை தேர்வு செய்திருந்தனர். இந்நிலையில் விஷமிகள் சிலர் இந்த இடத்தில் வருவாய்த்துறையினர் கொரானோவைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களை தங்க வைப்பதற்காக இந்த இடத்தை சுத்தம் செய்கிறார்கள் என்று புரளியை பரப்பியுள்ளதாக தெரிகிறது இதனால் இந்த பொய்யான தகவல் அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது 144 தடை உத்தரவு இருந்த போதிலும். இப்பகுதியில் நோயாளிகளை தங்க வைக்கக்கூடாது என்று சொல்லி மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். தகவலறிந்து வந்த வருவாய்த் துறையினரும் காவல்துறையினரும் முற்றுகை போராட்டம் நடத்திய பொது மக்களிடம் இந்த இடத்தை நோயாளிகள் தங்க வைப்பதற்கு சுத்தம் செய்யவில்லை என்றும். கொரானோ வைரஸ் ஒழிப்பு களப்பணியாற்றும் நபர்களுக்கு உணவு சமைத்து கொடுப்பதற்கு தயார் செய்கிறோம் என்றும் விஷமிகள் சிலர் பொதுமக்களிடையே தவறான தகவல்களை பரப்பி உள்ளார்கள் என்ற விவரத்தை அப்பகுதி மக்களிடம் எடுத்துக் கூறிய பின்பு பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றார்கள். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

129 total views, 3 views today