பெண் எழுத்தாளர்களுக்கு இந்த ஆண்டுக்கான புக்கர் விருது

கனடாவைச் சேர்ந்த 79 வயது பெண் எழுத்தாளர் மார்க்கரெட் ஆட்வுட், பிரிட்டனைச் சேர்ந்த 60 வயது பெண் எழுத்தாளர் பெர்னர்டீன் எவரிஸ்டோ ஆகிய இருவருக்கு இந்த ஆண்டிற்கான கௌரவம் மிக்க புக்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு 1992ம் ஆண்டில்தான் இருவருக்கு புக்கர் விருது பகிர்ந்தளிக்கப்பட்டது.அதன் பின்னர் ஒருவருக்குத்தான் விருது என விதிமுறை வகுக்கப்பட்டது. ஆயினும் இந்த ஆண்டு தீவிரமான பரிசீலனைகளுக்குப் பிறகு மார்க்கரெட் ஆட்வுட் எழுதிய தி டெஸ்டமென்ட்ஸ் (The Testaments), எவரிஸ்டோ எழுதிய Girl Woman, Other ஆகிய இரண்டு நாவல்களும் சம அளவிலான தகுதி பெற்றன.

இரண்டில் ஒன்றையும் தள்ள முடியாத நிலை ஏற்பட்டது. எனவே விதியை தளர்த்தி இருவருக்கும் புக்கர் விருதை பகிர்ந்தளிக்க தேர்வுக்குழுவினர் முடிவு செய்தனர். எவரிஸ்டோ புக்கர் விருது பெறும் முதல் கருப்பின பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.இருவருக்கும் பரிசுப்பணம் 45 லட்சம் ரூபாய் சம அளவில் பிரித்து வழங்கப்படும்.

138 total views, 3 views today