புழக்கத்திற்கு வந்தது புதிய ரூ.50, 200 நோட்டுகள்

கருப்பு பணம், ஊழலை ஒழிக்கும் வகையில் கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இந்த ரூபாய் நோட்டு தடையைத் தொடர்ந்து புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன. ஆனால் அதனால் எவ்வித பயனும் இல்லை; மக்கள் வங்கிகளுக்கு அலைந்ததும், கால் கடுக்க வங்கி வாயில்களில் நின்றதும் தான் மிச்சம்.

இதனைத் தொடர்ந்து புதிய 50 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்டது.

வெளிர் மஞ்சள் நிறத்தில் உள்ள புதிய 200 ரூபாய் நோட்டு, 66 மி.மீ. அகலத்திலும், 146 மி.மீ. நீளத்திலும், இதைப்போன்றே ப்ளூரஸண்ட் (நீலம் பச்சை) நிறத்தில் புதிய 50 ரூபாய் நோட்டு 66 மி.மீ. அகலத்திலும், 133 மி.மீ. நீளத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இன்னபிற அம்சங்கள், வரிசை எண், ரிசர்வ் வங்கி கவர்னர் கையெழுத்து, தேவநாகரி எழுத்தில் எண்கள், மகாத்மா காந்தியின் உருவப்படம் என்று கடந்த ஆண்டு அறிமுகம் படுத்தப்பட்ட 500, 2000 ரூபாய் நோட்டுகள் போன்றே உள்ளது.

முதலில் இந்த புதிய 50, 200 ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் மட்டுமே கிடைக்கும். ஆனால் தொடர் மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் பெரும்பாலான வங்கிகளில் இன்னும் சென்று சேரவில்லை. மேலும் ஏ.டி.எம்., எந்திரங்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டி இருப்பதால் அங்கும் பணம் வைக்கப்படவில்லை. பெரும்பாலும் அடுத்த வாரத்தில் வாங்கிகளில் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

468 total views, 0 views today


Related News

  • தமிழகத்தின் மொத்த கடன் ரூ.2.56 லட்சம் கோடி
  • ஜி.எஸ்.டி-யால் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
  • பேட்டரி வாகன உற்பத்தி அதிகரிப்பால் காப்பர் தேவை உயரும்
  • ஜி.எஸ்.டி. குறித்து அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் – ஜனார்தனன்
  • ஜி.எஸ்.டி., கருத்தரங்கம் – மத்திய அமைச்சர் தகவல்
  • பெட்ரோல் ரூ.67.76, டீசல் ரூ.57.23ஆக விலை மாற்றம் – நாளை காலை முதல் அமல்
  • பெட்ரோல், டீசல் தினமும் விலை மாற்றும் முறை நாளை முதல் அமல் – பெட்ரோல், டீசல் விலை குறைப்பு
  • சூர்யா உள்ளிட்ட நடிகர்களுக்குப் பிடிவாரண்ட் ஏன்? பின்னணி என்ன?
  • Leave a Reply