புரோ கபடி லீக் போட்டிகளில் குஜராத், புனே அணிகள் வெற்றி

5-வது புரோ கபடி லீக் திருவிழா 12 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள அணியுடன் தலா 3 முறையும், அடுத்த பிரிவில் உள்ள 6 அணிகளுடன் ஒரு முறையும், ‘வைல்டு கார்டு’ ஆட்டம் ஒன்றிலும் மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பெறும் அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறும். ஜெய்ப்பூர் சுற்று ஆட்டங்கள் கடந்த 6-ம் தேதி தொடங்கியது.

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் அணி, புனேரி பால்டன் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் 38-30 என்ற புள்ளிக்கணக்கில் புனேரி பால்டன் அணி வெற்றி பெற்றது. புனே அணியின் ராஜேஷ் மொண்டால் அதிகபட்சமாக 9 தொடுபுள்ளிகள் எடுத்தார்.

முன்னதாக நடந்த மற்றொரு வைல்டு கார்டு லீக் போட்டியில் பாட்னா பைரேட்ஸ் – குஜராத் பார்ச்சூன் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 33-29 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் பார்ச்சூன் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.

4,812 total views, 3 views today

Leave a Reply

Registration

Forgotten Password?

Close