புனே கோரேகான் போராட்டத்தால் தொடரப்பட்ட 700 வழக்குகளை திரும்பபெற்றார் உத்தவ் தாக்கரே

0
0

புனே கோரேகான் போராட்டத்தால் தொடரப்பட்ட 700 வழக்குகளை திரும்பபெற்றார் உத்தவ் தாக்கரே

புனே கோரேகான் தலித் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டவர்கள், அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கைதானவர்கள் ஆகியோர் மீதான 700 வழக்குகளை திரும்பப்பெறுவதாக உத்தவ் தாக்கரே கொள்கையளவில் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

படிப்படியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஓராண்டுக்குள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். வரலாற்றில் தலித் எழுச்சியை ஏற்படுத்திய பீமா கோரேகான் யுத்தம் தொடர்பாக, கடந்த ஆண்டு அப்பகுதியில் நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் ஏற்பட்ட மோதல் வன்முறையாகி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த கலவரத்தில் 30க்கும் மேற்பட்ட போலீசார் படுகாயம் அடைந்தனர். வன்முறையில் ஈடுபட்டதாக 300 பேரும், போராட்டத்திற்கு ஆதரவாக செயல்பட்டதாக கவிஞர் வராவர ராவ், சுதா பரத்வாஜ் உள்பட பலரையும் போலீசார் கைது செய்தனர்.

156 total views, 3 views today