புத்தாநத்தத்தில் நடைபெற்ற கல்வி விழிப்புணர்வு, நல்லொழுக்க மேம்பாட்டு நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்பு.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தாநத்தத்தில் வருடம் தோறும் நூரே அஹமதிய்யா பைத்துல்மால் டிரஸ்ட் நடத்தும் கல்வி விழிப்புணர்வு மற்றும் நல்லொழுக்க மேம்பாடு மாநாடு நடைபெறுவது வழக்கம் இந்நிலையில் அதோ போன்று இந்த வருடமும் இம்மாநாடு நடைபெற்றது இதில் 12, மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளுக்கு தகுந்த அறிவுரைகளும் வழங்கப்பட்டது.

இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினராக CMN.சலீம் மற்றும் சதீதுன் பாகவி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கும் பெற்றோர்களும் சிறப்பு பயான் நடத்தினர்.

இதனையடுத்து மாணவ, மாணவிகளுக்கு தேர்வு போட்டிகள் நடத்தப்பட்டது இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்புபரிசுகளும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஜமாத் தலைவர் ரஹ்மத்துல்லா, கலீபா லியாகத் அலி, கபீர் ஹழ்ரத்,தாஹீர் இம்தாதி, தாஜ் முகமது மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

இந்நிகழ்ச்சியினை நூரே அஹ்மதிய்யா பைத்துல் மால் டிரஸ்ட் குழுவினர் ஏற்பாடு செய்து இருந்தனர்

மத்திய மண்டல பொறுப்பாளர்
மணவை சா. அப்துல்லா

1,349 total views, 2 views today

Top

Registration

Forgotten Password?

Close