புதுவையில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது.1 கிலோ கஞ்சா பறிமுதல்

புதுச்சேரி: புதுவையில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது.1 கிலோ கஞ்சா பறிமுதல் .


மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை அருகே பூத்துறை செல்லும் பகுதியில் முந்திரி தோப்பு உள்ளது. இங்கு கஞ்சா விற்பனை நடை பெறுவதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் கஞ்சா விற்பவர்களை பிடிக்க பலமுறை முயற்ச்சித்தும் அவர்களை பிடிக்க முடியவில்லை. இதையடுத்து ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

நேற்று அந்த பகுதியில் கஞ்சா விற்பனை நடை பெறுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து வடக்கு பகுதி SP தலைமையான குற்றப்பிரிவு போலீசாரும்,மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இனியன் தலைமையிலான குற்றப்பிரிவு போலீசாரும் அங்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். பிடிபட்டவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சுகுமார் (21), சிவன் (24) ஆகியோர் என்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சா, அவர்கள் ஓட்டிவந்த 1பைக்கு, 3 செல்போன் அகியவை பறிமுதல் செய்யப்பட்டன.இதன் மொத்தம் மதிப்பு 2,00,000 ஆகும். இதில் சுகுமார் புதுவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் visuval communication படித்துள்ளார். சிவன் திருவண்ணாமலையில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார். குற்றவாளிகளை விரைந்து பிடித்த ஆய்வாளர் தங்கமணி உதவி ஆய்வாளர் இனியன் மற்றும் குமார் SP குற்றப்பிரிவு தலைமை காவலர் ராஜு காவலர் அரிபிரசாத் ஜெயக்குமார் மற்றும் மேட்டுப்பாளையம் குற்றப்பிரிவு காவலர் ராஜவேல் மூவரசன் ஆகியோர்களை போலீஸ் சூப்பிரண்டு ரச்னா சிங் பாராட்டினார்.

Chief Reporter
Ansari M

991 total views, 2 views today

Top

Registration

Forgotten Password?

Close