புதுச்சேரி : 4 புதுவை திருவண்டார் கோவிலில் பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது.

0
0

புதுச்சேரி : 4 புதுவை திருவண்டார் கோவிலில் பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது.

திருவண்டார் கோவில் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் மணிவண்ணன் தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி வனிதா (32) கடந்த மே மாதம் வீட்டின் வெளியே வைத்து தனது மகளுக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் வனிதாவின் களுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டன.

இது குறித்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் செயின் பறிப்பில் ஈடுபட்டது சென்னையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

சென்னை சென்ற போலீசார் ரெடில்ஸ் நொளம்பூர் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (26) என்பவரை கைதுசெய்தனர். நகையை செங்கல்பட்டில் உள்ள ஒரு நகைக் கடையில் விற்றுள்ளனர். நகைக் கடைகாரர் அதை உருக்கி மோதிரம், கம்மல்களாக செய்து வைத்திருந்தார். அங்கு சென்ற போலீசார் அந்த நகைகளை மீட்டனர். விஜயகுமார் மீது 5 குண்டாஸ், திருட்டு, வளிப்பறி உள்ளிட்ட 22 வழக்குகள் உள்ளன.மேலும்விஜயகுமாரின் நண்பரான தினேசை (32) தேடி வருகின்றனர்.

613 total views, 3 views today