புதுக்கோட்டையில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் “விலையில்லா விருந்தகம்” ஏழை எளிய மக்கள் வரவேற்பு..

நடிகர் விஜய்யின் அறிவிருத்தலின் படி ஏழை எளிய மக்கள் காலையில் பசி போக்க இரண்டு வாரங்களுக்கு முன்பு விஜய் மக்கள் இயக்கம் மாநில தலைவர் புஸ்ஸி அனந்த் தலைமையில் புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட தலைவர் ஜெ. பர்வேஷ் அவர்கள் ஏற்பாட்டில் தினமும் “விலையில்லா விருந்தகம்” என்ற பெயரில் தினமும் 130 க்கும் அதிகமான ஏழை எளிய மக்கள் காலை காலை உணவு உணவருந்தி மகிழ்ந்து வருகின்றனர்..இது ஏழை எளிய மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது..

காலை பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகள், பள்ளி மாணவ மாணவிகள், துப்புரவு பணியாளர்கள், உட்பட்ட அனைத்து தரப்பு காலை உணவருந்தி செல்கின்றனர்..

இதை பற்றி புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட தலைவர் ஜெ. பர்வேஷ் நம்மிடம் பேசுகையில் தினமும் 2000 ரூபாய் செலவாகிறது.. இருப்பினும் ஏழை எளிய மக்கள் காலையில் உணவருந்தி தளபதி விஜய் யை வாழ்த்தி மகிழ்ச்சியுடன் போகின்றனர் இது போதும் எங்களுக்கு என்று கூறுகிறார்…மேலும் விலையில்லா விருந்தகத்தை தொடர்ந்து செய்வோம் என்று உத்வேகத்துடன் கூறினார்..

159 total views, 3 views today

Registration

Forgotten Password?

Close