புதிய கல்வி கொள்கை :சூர்யா துவங்கி வைத்து இருக்கின்றார் : இயக்குனா் சமுத்திரகனி பேட்டி !!

0
0

புதிய கல்வி கொள்கை குறித்து அனைவருக்கும் வருத்தம் இருக்கின்றது. சூர்யா துவங்கி வைத்து இருக்கின்றார். அனைவரும் இதைபற்றி  பேசி தீர்வு காண வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என நடிகரும் ,இயக்குனருமான சமுத்திரகனி பேட்டி அளித்தார்

கோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  நடிகரும் , இயக்குனருமான சமுத்திரகனி செய்தியாளர்களிடம்  பேசுகையில்,

புதிய கல்வி கொள்கை தொடர்பாக சூர்யாவின் கருத்து வரவேற்க தக்கது.எனவும் கிராமபுற மாணவர்களுக்கானதை நடிகர்  சூர்யா பேசியிருப்பதாக தெரிவித்தார்.. புதிய கல்வி கொள்கை குறித்து அனைவருக்கும் வருத்தம் இருப்பதாக கூறிய சமுத்திரகனி , சூர்யா துவங்கி வைத்து இருக்கின்றார்.

அனைவரும் இதைபற்றி  பேசி தீர்வு காண வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எனக் கூறினார்.சாதி என்ற விடயம் மீண்டும் மாணவர்கள் மத்தியில் வளர துவங்கி இருப்பதாகவும் கல்லூரி மாணவர்கள் கையில் சாதிக்கொன்று தனியாக கலர், கலராக கயிறு கட்டி  திரிகின்றனர்.சாதி என்பது இப்போது பள்ளிகளிலும் வந்து விட்டது. திரும்பவும் படங்கள் மூலமாக  மூளை சலவை செய்து சாதியை தள்ளி வைத்து விட்டு பயணப்பட்டால்  மட்டுமே மனிதராக முடியும்  எனத்தெரிவித்தார்.

சாதி வேறுபாடு மீண்டும் திரும்ப ஆரம்பித்து விட்டது என்றும் கூறிய அவர்,இந்தி தேவை எனில் படித்து கொள்ள வேண்டியதுதான்  எனவும் அவர் தெரிவித்தார்.சென்னையில் ரவுடியிசம் செய்யும் கல்லூரி மாணவர்களின் கையை உடைக்கும் நிலை  குறித்த கேள்விக்கு, தண்டணைகள் கடுமையாக இருந்தால் மட்டுமே தவறுகளை தடுக்க முடியும். பேசி கிட்டே இருந்தால் எதுவும் நடக்காது .

அதிரடியாக ஏதாவது செய்ய வேண்டும்.என்றும் செத்துவிடுவேன் என்ற பயம் இருந்தால்தான் பாலியல் தவறு செய்ய மாட்டார்கள். அது போல சில விவகாரங்களில்  பயம் கொடுப்பதில் தவறில்லை எனவும் அவர் தெரிவித்தார்.. சாட்டையை தொடர்ந்து ஒரு படத்தில் பேராசிரியராக நடிப்பதாகவும் ,அப்பா 2 படத்திற்காக லொக்கேஷன் பார்க்க வந்ததாகவும் அவர் தெரிவித்தார்..

362 total views, 3 views today