பிரான்ஸ் நாட்டு கிறிஸ்துவ தம்பதிகளுக்கு மறுமணம் செய்து வைக்க முயற்சி செய்த இந்து மக்கள் கட்சியினர்

0
0

உலகம் முழுவதும் பிப்ரவரி 14 காதலர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. காதலர்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்கள் சொல்லி காதலை பரிமாறிக் கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்து மதத்தை பாதுகாக்கிறோம் இந்து மக்களை பாதுகாக்கிறோம் என்ற போர்வையில் இந்து மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் காதலர்கள் ஒன்றுகூடி வாழ்த்துச் சொல்லும் பகுதிகளில் சென்று வலுக்கட்டாயமாக திருமணம் நடத்தி வைப்பது. சிலநேரங்களில் பூங்காக்களை சுற்றிப் பார்க்க வரும் அண்ணன், தங்கச்சி ஆகியோர்களை காதலர்கள் என்று நினைத்து திருமணம் செய்து வைக்க முயற்சிப்பது ஆகிய சம்பவங்கள் கடந்த காலங்களில் அரங்கேறியுள்ளது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு பிப்ரவரி 14 காதலர்கள் தினத்தன்று தஞ்சாவூர் மாவட்டம் தாராசுரம் கோவிலை சுற்றி பார்க்கவந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் காதலர்கள் என்று நினைத்து அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி செய்தபோது அவருடைய குழந்தைகள் மம்மி டாடி என்று கூப்பிட்டுக் கொண்டு அவர் இருக்கும் பகுதிக்கு ஓடிவந்தனர் இதை கட்டு அதிர்ச்சி அடைந்த இந்து மக்கள் கட்சியினர் செய்வதறியாமல் திகைத்து நின்றனர் பின்னர் சுதாரித்துக் கொண்டு கோஷம் போடுவது போல் அங்கிருந்து ஓட்டம் எடுத்தனர்

324 total views, 6 views today