பாமகவின் புவனகிரி தொகுதி நிர்வாக ஆலோசனை கூட்டம்.

கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பில் உள்ள வேலன் திருமணமகாலில் பாமகவின் நிர்வாக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சேத்தியாத்தோப்பு பாமக நகர தலைவர் ஜெய்சங்கர் தலைமை வகித்தார்.

புவனகிரி ஒன்றிய செயலாளர் சரண்ராஜ்அனைவரையும் வரவேற்றார்.
பின்னர் நடைபெற்ற நிகழ்வில் பாமகவின் மாநில் துணை பொதுச்செயலாளர் அஷோக்குமார்
,கடலூர் மாவட்ட செயலாளர் சுரேஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக வருகைதந்தனர்.பின் சிதம்பரம் பாராளுமன்றத்தொகுதியில்
கட்சித்தலைமையின் வழிக்காட்டல்படி துரிதமாக வாக்குககள்சேகரிக்கவேண்டும்.
பாராளுமன்றதொகுதியில் நமது வேட்பாளரோ அல்லது கூட்டணிக்கட்சி வேட்பாளோரோ என நிற்கும்போது அவர்களது வெற்றிக்காக வாக்குகள் சேகரித்து வெற்றிகளை பெறவேண்டும்.

தற்போது வர இருக்கின்ற பாராளுமன்றத்தேர்தலை கவனத்தில் கொண்டு பாமகவின் பூத்ககமிட்டி ஏஜெண்டுகளாக உள்ளவர்க்ள தங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட வாக்காளர்களை ,சந்தித்து பாமக மற்றும் கூட்டணிக்கட்சி வேட்பாளர்களுக்கு.
அனைத்து வாக்குகளையும் தவறாமல் சேகரித்தல்,பூத்கமிட்டி விண்ணப்பங்களில்
செயல்பாட்டில் உள்ள மொபைல்எண்ணைக்குறிப்பிடவேண்டும்,
சிதம்பரம்&விருத்தாசலம் சாலையை உடனடியாக
சீரமைத்தல்,காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக
அறிவித்தல்,நெய்வேலி என்எல்சி தனது மூன்றாவது சுரங்கவிரிவாக்கப்பணியை கைவிடவேண்டும் .
உள்ளிட்ட பலதீர்மாணங்கள்
நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாநில மகளிரணி செயலாளர்
சிலம்புச்செல்வி, தேவதாஸ்படையாண்டவர்,
மாவட்ட துணைசெயலாளர் செல்வராஜ்,
உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர்.
முடிவில் சேத்தியாத்தோப்பு
நகர துணைதலைவர் கலைமணி நன்றி கூறினார்.
செய்தியாளர்
அகிலன் மணி

1,259 total views, 3 views today

Registration

Forgotten Password?

Close