பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் நியாமான தீர்ப்பை வழங்க வலியுறுத்தி கோவை ரயில் நிலைய முற்றுகையில் ஈடுபட்ட மனித நேய ஜனநாயக கட்சியனர் கைது செய்யப்பட்டனர்

பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று இந்தியாவின் கறுப்பு தினமாக முஸ்லீம் அமைப்பினர் அனுசரித்து வருகின்றனர்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் நியாமான தீர்ப்பை வழங்க வலியுறுத்தி கோவை ரயில் நிலைய முற்றுகையில் ஈடுபட்ட மனித நேய ஜனநாயக கட்சியனர் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாகமனித நேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீத் மீடியா 7 நீயூஸ் இணைதள தொலைக்காட்சிக்கு பேட்டியில் கூறியதாவது:-

பாபர் மசூதி இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 25 ஆண்டுகளாக நீதிகிடைக்க மக்கள் காத்திருக்கின்றனர். இந்த வழக்கில் அயோத்தியில் உள்ள அந்த இடம் யாருக்கு சொந்தமானது என்பதை ஆய்வு செய்து நியாயமான தீர்ப்பை தாமதிக்காமல் உடனடியாக வழங்க வேண்டும். 

வழக்கு நிலுவையில் உள்ள போதே பி.ஜே.பி.யின் நட்பு அமைப்புகள் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என பரப்புரை செய்து வருகின்றனர்.அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்தால் ரயில் நிலையம் அருகே சுமார் ஒரு மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

301 total views, 4 views today

Top

Registration

Forgotten Password?

Close