பாபநாசம் அருகே ஐம்பொன் சிலை கண்டெடுப்பு

தஞ்சாவூர் மாவட்டம்
பாபநாசம் அருகே பொன்மேய்ந்தநல்லுார் அலங்காநத்தம் குடியான தெருவை சேர்ந்த ராஜப்பா மகன் ராஜாங்கம்  என்பவரது வீட்டில் வீட்டு வேலை செய்வதற்காக குழிதோண்டும் பொழுது  ஒரு விஷ்ணு சிலை மற்றும் ஒரு அம்பாள் சிலை சுமார் 2 அடி உயரம் உள்ள ஐம்பொன் சிலை  கண்டெடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த அரசு அலுவலர்கள் சிலையை மீட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

150 total views, 3 views today