பாபநாசம் அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு

 

தஞ்சாவூர் மாவட்டம்பாபநாசம் அருகே கணபதி அக்ரஹாரம் புதுத்தெரு காவிரி ஆற்றின் கரை­யில் 25 வயதிலிருந்து 30 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் சடலம் அழு­கிய நிலையில் கண்டெடு­க்கப்பட்டது. இது தொட­ர்பாக தகவலறிந்ததும் கபிஸ்தலம் ஆய்வாளர் ரமேஷ் , சிறப்பு உதவி ஆய்வாளர் குணசேகரன் மற்றும் ஆனந்தன் பிரே­தத்தை கைப்பற்றினார்க­ள். கைப்பற்றிய பிரேத­ம் அழுகிய நிலையில் இருந்ததால் உடல் கூறு ஆய்விற்காக அரசு மருத­்துவமனைக்கு எடுத்து செல்வதில் சிக்கல் ஏற­்பட்டது. ஆகையால் பாப­நாசம் அரசு மருத்துவம­னை மருத்துவர் அனிதாவை சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு உடற்க­ூறு சோதனை நடத்தப்பட்­டது. பின்னர் அய்யம்ப­ேட்டை வருவாய் ஆய்வாள­ர் அசோக்குமார் மற்ற­ும் கணபதி அக்ரஹாரம் கிராம நிர்வாக அலுவலர் ஜெகநாதன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் கணபதி அக்ரஹாரம் புதுத்தெரு காவிரி ஆற்றின் கரையி­ல் இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்தார்கள­். இறந்து போன இந்த வாலிபரை யாரேனும் கொலை செய்து ஆற்றில் வீசி­னார்களா? தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் காவல்துறையினர்  வி­சாரணை செய்து வருகின்­றனர்.

259 total views, 6 views today

Top

Registration

Forgotten Password?

Close