பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி? இதோ சில டிப்ஸ் !

தீபாவளி பண்டிகை கொண்டாடும் போது விபத்துககளைத் தவிர்க்கவும், பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது குறித்தும் சென்னை மாநகரக் காவல் துறை பொதுமக்களுக்கு 15 ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே பட்டாசு, புதுத் துணி, பலகாரம் இவைகள் தான் முக்கிய பங்கு வகிக்கும். தீபாவளி அன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை புதுத் துணி அணிந்து பட்டாசு வெடிப்பது வழக்கம். அவ்வாறு பட்டாசு வெடிக்கும் போது பொது மக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து சென்னை மாநகர காவல்துறை சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.
1. காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். அதிக அளவு ஓசை எழுப்பக்கூடிய பட்டாசுகளை தயாரிக்கவோ, பயன்படுத்தவோ, விற்கவோ கூடாது.
2. எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் உள்ள இடத்தில் பட்டாசுகளை வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். மோட்டார் வாகனம், கார், பேருந்து போன்ற வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ள இடங்களின் அருகிலும், பெட்ரோல் சேமித்து வைத்திருக்கும் இடம், பெட்ரோல் பங்க் அருகிலும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.

514 total views, 4 views today

Top

Registration

Forgotten Password?

Close