பாஜகவில் இணைந்தார் ராதாரவி
பாஜகவின் தேசிய செயல் தலைவர் ஜே.பி நாட்டா முன்னிலையில், நடிகர் ராதாரவி அக்கட்சியில் இணைந்தார்.
கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்த ஜே.பி நாட்டாவை, தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மற்றும் கட்சி நிர்வாகிகள் நேரில் சென்று வரவேற்றனர்.
இதனிடையே, விமான நிலையத்தில் நாட்டாவை சந்தித்த நடிகர் ராதாரவி, அவருக்கு சால்வை அணிவித்து தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார். அப்போது, அதிமுக தன்னை முழுமையாக பயன்படுத்தி கொள்ளவில்லை என்பதால் பாஜகவில் இணைந்துள்ளதாக ராதாரவி கூறினார்.
192 total views, 3 views today