பழனியில் மத்திய அரசின் செயல்பாட்டைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக ரயில் மறியலில் ஈடுபட்டனர்.

 1. பழனியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ரயில்வே துறையை தனியார்க்கு தாரைவார்ப்பது,மற்றும் மதுரைக் கோட்டத்தில் உள்ள 715 காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்,என்ற கோரிக்கைகளை முன் வைத்து மறியலில் ஈடுபட்டனர்.மேலும் மறியல் செய்ய
  முயன்றவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைதுசெய்தனர். பாலக்காடு-மதுரை எக்ஸ்பிரஸ் ரயிலை மறிக்க முயன்ற DYFI அமைப்புகளின் சேர்ந்தவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்ப்பட்டது.இதில்
  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழனி ரயில் நிலையத்தில் ஏராளமான போலீசார் நிறுத்திவைக்கபட்டு இருந்தனர். ஜனநாயக வாலிபர் சங்கம் வாலிபர்கள் தடையை மீறி ரயில் மறியல் ஈடுபட்டனர். ரயில் மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர். சிறிது நேரம் அங்கு போலீசாருக்கும், ஜனநாயக கட்சி வாலிபர்களுக்கும் தள்ளு முள்ளு,ஏற்ப்பட்டது.
  கைது செய்தவர்களை பழனியில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

  பழநிசுரேஷ்
  மாவட்ட நிருபர்.

230 total views, 2 views today

Top

Registration

Forgotten Password?

Close