பள்ளி, கல்லூரிகளில் இருந்து 50 மீட்டர் தொலைவுக்கு ஜங்க் புட் (junk food) உணவுகளை விற்க தடை விதிப்பது தொடர்பான வரைவை மத்திய உணவு பாதுகாப்பு ஆணையரகம் விரைவில் வெளியிடவுள்ளது.

பிஸ்ஸா , டாகோஸ் , ஹேம்பர்கர்ஸ் உள்ளிட்ட ஜங்க் புட் வகைகளை சாப்பிடுவதால் உடல்நிலைக்கு பாதிப்பு ஏற்படுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளிலும், கேண்டீன்களிலும் ஜங்க் புட் உணவுகளை விற்பதற்கு தடை விதிக்கும் வகையிலான வரைவை, மத்திய உணவு பாதுகாப்புத்துறை ஆணையரகம் உருவாக்கி வந்தது.

இந்நிலையில், முழுமையான வரைவை தயாரித்து, இன்னும் ஓரிரு வாரத்தில் இறுதி அறிக்கையை மத்திய உணவு பாதுகாப்புத் துறை ஆணையரகம் வெளியிடவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 282 total views