பல்லடம் மலையம்பாளையத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி

ரூ.500 புதிய நோட்டுகளை மத்திய அரசு அதிகம் அச்சிட்டு வெளியிட வேண்டும்

பல்லடத்தில் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

ரூ.500 புதிய நோட்டுகளை மத்திய அரசு அதிகம் அச்சிட்டு வெளியிட வேண்டும் என்று பல்லடத்தில் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள மலையம்பாளையத்தில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் வட்டாரத் தலைவர் சுப்பிரமணியத்தின் வீட்டிற்கு வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது. மத்திய அரசு நாட்டில் கருப்பு மற்றும் கள்ளப்பணத்தை ஒழிப்பதற்காக ரூ.500,ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்த திட்டம் நல்ல திட்டம் ஆனால் சரியான முறையில் திட்டமிடப்படவில்லை. அதே போல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் சரியான முறையில் மேற்கொள்ளப்படவில்லை இதனால் அடித்தட்டு மக்கள் கடந்த 4 நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனை,பால்,பெட்ரோல் பங்க்,காஸ்,பேருந்து போன்ற அத்திவாசியங்களுக்கு வரும் 30ம் தேதி வரையாவது பழைய ரூபாய் நோட்டுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.இதனை ஏற்க மறுப்பவர்களை துறை ரீதியாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேவையான அளவு புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு அரசு வெளியிட வேண்டும்.இல்லையெனில் நாட்டில் 20 நாட்களில் பணப்புழக்கம் இல்லாது பண முடக்கம் தான் ஏற்படும்.புதிய ரூ.2000நோட்டுகளை பெற்ற மக்கள் அதனை மாற்ற முடியாமல் சிரமத்திற்குள்ளாகின்றனர். அதற்கு பதிலாக ரூ.500,ரூ.100 நோட்டுகளை புதியதாக அச்சிட்டு மக்களுக்கு தேவையான அளவு பணப்புழக்கத்திற்கு விட மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேணடும்.

 556 total views,  1 views today