பல்லடம் சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை………….

S.Nesaprabhu palladam reporter cell – 9659996000

பல்லடம் புதியதாக திறக்கப்பட உள்ள அரசு மதுபான கடைக்கு அனுமதி வழங்க கூடாது என 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பல்லடம் சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகம் முற்றுகை………….

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த ஆறாக்குளம் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.அப்பகுதியில் தனியார் பள்ளி ,மற்றும் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.இங்கு குடியிருப்பு மத்தியில் புதியதாக மதுக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.இதனை அறிந்த அப்பகுதி பொது மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் தங்கள் பகுதியில் மதுக்கடை திறக்க கூடாது என மனு அளித்தனர்.அதனி தொடர்ந்தும் மதுபான கடை அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிகிறது.அதனை தொடர்ந்து ஆறாக்குளம் பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன் அவர்களிடம் மனு அளிக்க வந்தனர்.பொதுமக்கள் வந்த பொழுது சட்டமன்ற உறுப்பினர் தனது அலுவலகத்தில் இல்லாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்து சம்பவ இடம் வந்த சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.அப்பொழுது அவரிடம் பேசிய அப்பகுதி பெண்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் மதுபான கடை வருவதால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படும்,அதுமட்டுமின்றி பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் வழியிலும் பேருந்து நிறுத்தத்திற்கு செல்லும் வழியிலும் மதுபான கடை அமைய இருப்பதால் மாணவ,மாணவியருக்கும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்படும்,திருட்டு சம்பவங்கள் நடைபெரும் அப்பாய்ம் உள்ளதால் தங்கள் பகுதியில் மதுக்கடை அமைக்க கூடாது என தெரிவித்தனர்.அதனை தொடர்ந்து அப்பகுதியில் மதுபான கடை அமையாமல் இருக்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்ட மன்ற உறுப்பினர் உறூதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.ஆனால் தங்கள் பகுதியில் மதுபான கடை அமைந்தால் போராட்டம் பெரிய அளவில் நடைபெறும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

211 total views, 0 views today


Related News

  • காவிரி மேலாண்மை வாரியம் கேள்விக்குறிதான்:மு.க.ஸ்டாலின்
  • அதிமுகவில் இருந்து கே.சி.பழனிசாமியை நீக்கியது வேதனை அளிக்கிறது: தொல்.திருமாவளவன்
  • உடல் நலக்குறைவு காரணமாக சசிகலாவின் கணவர் நடராஜன் மருத்துவமனையில் அனுமதி
  • கானா பள்ளிக்கு சர்ப்பரைஸ் செய்த இந்திய நிறுவனம்…!
  • குருகாணிக்கை செலுத்திய மாவட்ட ஆட்சியர்..
  • ஸ்வீட் சர்ப்ரைஸ்’ கொடுக்கும் இன்ஸ்பெக்டர்!
  • திருச்சியில் சாரல் மழை…
  • பல்லடம் விவசாய விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் மற்றும் மின்பாதைகள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்…
  • Leave a Reply