அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக பெண்களைத் திரட்டி போராட்டம் நடத்த முயன்ற பரூக் அப்துல்லாவின் சகோதரி மற்றும் மகளை ஸ்ரீநகரில் போலீசார் கைது செய்தனர்.

லால் சௌக் எனுமிடத்தில் நேற்று போராட்டம் நடத்த பெண்கள் திரண்டனர். இதற்கு தலைமை வகித்த பரூக் அப்துல்லாவின் சகோதரி சுரையா மற்றும் வீட்டில் கருப்புக் கொடி ஏற்றி, போராட்டத்தில் ஈடுபட்ட மகள் சாபியா ஆகியோர் துணை ராணுவத்தின் மகளிர் பிரிவு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காஷ்மீர் மணப்பெண்கள் விற்பனைக்கு அல்ல என்ற பதாகைகளையும் கருப்பு கைவளையங்களையும் அணிந்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆகஸ்ட் 5ம் தேதி சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா கைது செய்யப்பட்டார். அவர் மீது பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

273 total views, 3 views today