பனைக்குளம் த.மு.மு.க தலைவர் மகனுக்கு அரிவாள் வெட்டு..!

இராமநாபுரம் மாவட்டம் பனைக்குளம் த.மு.மு.க தலைவர் மகனுக்கு அரிவாள் வெட்டு..!
ஆபத்தான நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி..!
வாலாந்தவை விலக்கில் பயங்கரம்.
கஞ்சா வியாபாரிகள் கைவரிசையா?

பனைக்குளம் த.மு.மு.க தலைவர் செய்யது முஹம்மது (47) இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தில் டீ கடை நடத்தி வரும் சமூக சேவகர்.
இவரது மூத்த மகன் நிஹால் அஹமது (21) இராமநாதபுரம் அண்ணா பொறியியல் கல்லூரியில் BE படிப்பை முடித்து உயர் கல்விக்காக விண்ணப்பித்து காத்திருக்கிறார்.
த.மு.மு.க வின் பனைக்குளம் மாணவரணியிலும் உறுப்பினராக உள்ளார்.த.மு.மு.க வின் இரத்ததான முகாம்களிலும் உயிர் காக்கும் அவசர நேரங்களிலும் இரத்தானம் செய்யக்கூடிய தன்னார்வ மாணவர் நிஹால் இதற்காக பல சான்றிதழ்களும் பெற்றுள்ளார்.இன்னும் சில தினங்களில் வெளியூர் சென்று உயர் கல்வி பயில உள்ள நிலையில் நண்பர்கள் தேநீர் விருந்தளிக்குமாறு மாணவர் நிஹாலை வற்புறுத்தி கேட்டுள்ளனர். மகிழ்ச்சியை கொண்டாட நிஹாலும் ஒரு காரில் இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள
நேற்று இரவு சுமார் 10 மணியளவில் தனது மாணவ நண்பர்களுடன் வழுதூர் எரிவாயு நிலையம் அருகில் இராமேஸ்வரம் நெடுஞ்சாலை ஓர பிரபல. பேக்கரி & தேநீர் விடுதியில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தார். அப்பொழுது 4 பேர் கொண்ட மது அருந்திய நிலையில் இருந்த கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் சிவப்பு நிற பல்சர் பைக் மற்றும் ஸ்பிலண்டர் பிளஸ் டூ வீலரில் டீக்கடைக்கு வந்தனர்.அங்கு தேநீர் அருந்திக்கொண்டிருந்த மாணவர் நிஹாலையும் அவரது நண்பர்களையும் தகாத வார்த்தைகளில் பேசியும் இரும்பு கம்பியால் தாக்கியும் அரிவாளால் மண்டையில் வெட்டியும் மாணவர்கள் அனைவரையும் ஓட ஓட விரட்டி அடித்திருக்கிறார்கள்.சினிமா போல் காட்சியளித்த இந்த சம்பவத்தை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் நாளா திசைகளிலும் தெரித்து ஓடினர்.இந்த கொடூர தாக்குதலில் மாணவர் நிகாலுக்கு பலத்த காயம் ஏற்பட்டு இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.தாக்குதலை தடுக்க முடியாத உடன் இருந்த மாணவர்களும் உயிர் பிழைக்க ஓடி ஒழிந்தனர்.
நிஹால் வந்த காரின் கண்ணாடியை உடைத்து காரில் இருந்த ரூ 20,000 மதிப்புள்ள செல்போனையும்,மயங்கி கிடந்த நிஹாலிடமிருந்த ரூ 10,000 ரொக்க பணத்தையும் கும்பல் திருடியுள்ளது. மின்னல் வேகத்தில் நடந்த இந்த செயலை கண்ட பேக்கரி ஊழியர்களும் கடையை போட்டது போட்டபடி உயிர் பிழைக்க தலை தெறிக்க ஓடி ஒளிந்துள்ளனர்.
பயங்கர தாக்குதலை மாணவர்கள் மீது நடத்திய கும்பல் கொள்ளையடித்த பணத்துடனும் விலையுயயர்ந்த செல்போனுடனும் பைக்கில் பறந்தனர்.
கொலைகார கும்பல் சென்றதை அறிந்த
நிஹாலின் நண்பர்கள் இரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த மாணர் நிஹாலை காரில் தூக்கிக் கொண்டு உயிரைக் காப்பாற்ற இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு விரைந்தனர்.
அங்கு முதல் உதவி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகவல் அறிந்த த.மு.மு.க மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள் ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர்.போராட்டம் வெடிக்கும் சூழலும் பதட்டமும் உருவானது.
தாக்குதல் நடத்திய கும்பல் வாலாந்தரவை பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக கஞ்சா விற்பனை செய்யும் போதை கும்பலாக இருக்கலாம் என தெரியவருகிறது. அடிக்கடி இது போன்ற கொலை வெறி தாக்குதல்கள் இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சகஜமாக இந்த கும்பல் நடத்துகிறார்கள் காவல்துறை அவற்றை லஞ்சம் பெற்றுக்கொண்டு மறைத்து விடுகிறார்கள் என பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இது போன்ற கொலை,கொள்ளை,திருட்டு,வழிப்பறி,மற்றும் கஞ்சா விற்பனை செய்யும் கும்பலை அதிரடியாக கைது செய்து மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என பனைக்குளம் த.மு.மு.க கிளை செயலாளரும் முன்னால் மாவட்ட த.மு.மு.க – ம.ம.க பொருளாளருமான பனைக்குளம் பரக்கத்துல்லாஹ் காவல்துறையை கேட்டுக் கொண்டுள்ளார்.
பயங்கர போதை பொருட்களை மாவட்டம் முழுவதும் விற்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணவர் நிஹாரை கொலைவெறி தாக்குதல் நடத்திய கொலைகார கும்பலை கைது செய்யவும் பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கொள்ளை போன பொருட்களை மீட்க கோரியும் த.மு.மு.க போராட்டங்கள் நடத்தும் என தெரிகிறது.

இந்திய திருநாட்டின் மிகப்பெரிய புண்ணிய தளமான இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி நடைபெறும் இத்தகைய கொலை வெறி,கொள்ளை சம்பவங்கள் தொடர்வது காவல்துறைக்கு பங்கு செல்வதால்தான் என பகுதி சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் தனது தூய்மையான நிர்வாகத் திறனை நிரூபித்து களங்க பெயரை துடைக்க வேண்டும்.
முகவை அப்துல்லாஹ்.

1,488 total views, 126 views today

Top

Registration

Forgotten Password?

Close