நேபாளத்தில் மருத்துவமனைகள் கட்டிய நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்ஸி

நேபாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக அந்நாடு மிகப்பெரிய இழப்பை சந்தித்தது. இதையடுத்து, கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நேபாளத்தில், சுகாதார மையங்கள் அமைக்க யுனிசெப் அமைப்புடன் அந்நாட்டு அரசு ஒப்பந்தம் செய்து கொண்டது.

இந்நிலையில், யுனிசெப் அமைப்புடன் இணைந்து அர்ஜென்டினா நாட்டு கால்பந்து வீரர் மெஸ்ஸி, நேபாளத்தில் 14 சுகாதார மையங்கள் கட்டுகிறார். மொத்தம் 74 சுகாதார மையங்கள் கட்ட யுனிசெப் ஒப்பந்தமிட்டது. இதில் மெஸ்ஸி 3 சுகாதார மையம் கட்டியுள்ளார். மேலும் 11 மையங்கள் கட்டப்பட்டு வருவதாக மெஸ்ஸி பவுண்டேஷன் அமைப்பு தெரிவித்துள்ளது.

நேபாள நாட்டில் மெஸ்ஸி பவுண்டேஷன் சார்பில் கட்டி முடிக்கப்பட்ட சுகாதார மையங்கள் தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக யுனிசெப் அமைப்பின் நல தூதர் தெரிவித்துள்ளார்.

350 total views, 2 views today

Leave a Reply

Registration

Forgotten Password?

Close