நெல்லை மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பு தீவிரம் ஜிஎஸ்டியால் விற்பனை பாதிப்பு வியாபாரிகள் கவலை

ஆண்டு தோறும் இயேசு கிறித்துவின் பிறப்பைக் குறிக்க கொண்டாடப்படும் விழாவாகும்.

கிறிஸ்துமஸ் நாட்களில் திருப்பலி, குடில்கள், கிறித்துமஸ் தாத்தா, வாழ்த்து அட்டைகளையும் பரிசுகளையும் பரிமாறுவதோடு வண்ண விளக்குகளால் கிறித்துமஸ் மரம் வைத்தல், கிறித்துமஸ் சிறப்பு விருந்து என விழா களைகட்டும். இதில் கிறிஸ்த்து பிறப்புவிழா கிறித்தவர்களின் ஒரு முக்கியமான திருநாளாகும். இது பெரும்பாலான கிறித்தவர்களால் டிசம்பர் 25ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

கிறிஸ்துமஸ் என்றால் நம் நினைவுக்கு வருவது கிறிஸ்துமஸ் கேக் தான். கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பு என்பதே மிகப்பெரிய நிகழ்வாக நடத்தும் அளவுக்கு, கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பு மிக முக்கியமான ஒன் றாக உள்ளது. பல்வேறு உலர் பழங்களை கொண்டு விசேஷமாக தயாரிக்கப்படும் கிறிஸ்துமஸ் கேக்குகளில் பிளாக் பாரஸ்ட், ஒயிட் பாரஸ்ட், பட்டர் க்ரீம், ஆப்பிள், பனானா, கேரட், ஸ்டாபெரி உட்பட சுமார் 20க்கும் வகைகளில் கட்டிங் கேக்குகள் ரூ.10 முதல் 25 வரையிலும், 500 கிராம் முதல் 5 கிலோ வரையில் (ரூ. 100 முதல் 1000 வரை ) உள்ளது. இதில் 1கிலோ கேக் ரூ.200 முதல் 600 வரை வட்டம், சதுரம், ஓவல், அர்டீன், கிறிஸ்துமஸ் தாத்தா உருவம், வாசகங்கள் அடங்கிய வித விதமான, வண்ண வண்ண கலர்களில், வித விதமான டிசைன்களில் கேக் தயாரித்து வாடிக்கையாளர்களின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.

இருப்பினும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கேக் விற்பனை அதிகளவில் இருந்தாலும், ஜிஎஸ் டி காரணமாக விற்பனை வெகுவாக குறைந்து உள்ளது என கேக் விற்பனையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

 935 total views